திரு. சுப்ரமணியம்பிள்ளை திருவாசன்

(முன்னாள் உரிமையாளர் - TMS, பொகவந்தலாவ)

சுப்ரமணியம்பிள்ளை திருவாசன்

தோற்றம்: 20 பெப்ரவரி 1940 - மறைவு: 15 ஆகஸ்ட் 2026

இந்தியா - திருச்சி மாவட்டம், தத்தமங்கலம் கிராமம், சாத்துடையான் கோத் திரம் காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம்பிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பண்டாரவளை பெரியண்ணன்பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மருமகனும், கனகபூரணம் அவர்களின் அன்புக் கணவருமாகிய திரு.சு.திருவாசன் அவர்கள் 15-08-2026 சனிக்கிழமை அன்று இரவு 9.45 மணியளவில் சிவலோகபதம் அடைந்தார்.

அன்னார், லோகஜயந்தி (கொழும்பு), சுபாசந்தர் (கனடா), இராஜசேகரன் (கென்யா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

வை.தேவராஜூ (Romax Hardware Centre, Colombo), ஷர்வாந்திகா (கனடா), ஜனனி (கென்யா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மாள் (திருச்சி), தைலம்மை (கொழும்பு), முத்தையாபிள்ளை (பொகவந்தலாவ), கணேசன் (Lotus Hardware, Hatton), முத்துக்கண்ணு (அம்பிட்டிய) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடேசப்பிள்ளை (திருச்சி), சுப்பிரமணியம்பிள்ளை (கொழும்பு), பெரியசாமிப்பிள்ளை (அம்பிட்டிய) ஆகியோரின் மைத்துனரும்,

முத்துக்கண்ணு (Sarava nas Stores, பொகவந்தலாவ), சீதாலெட்சுமி (கொழும்பு) ஆகியோரின் கொழுந்தனாரும்,

காலஞ்சென்றவர்களான வையாபுரிபிள்ளை - மீனாட்சி அம்மாள் (பண்டாரவளை), ராமலிங்கம் (வத்தளை) - காலஞ்சென்ற சிவசங்கரி, காலஞ்சென்ற கணேசன் (Saravanas Textiles) - ராஜாம்பாள் ஆகியோரின் சம்பந்தியும்,

லஷாந்த் (அவுஸ்திரேலியா), ஆகாஷ் (கனடா), ஜய்நிதேஷ் (சென்னை) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும், லயா, ஸ்ரீதி (கனடா), வேதவ். ஸ்ரீகிரிஷவ் (கென்யா) அகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல- 43/15, 2nd Cross Street, இராமலிங்க நகர், South Ext, திருச்சி இல்லத்தில் திங்கட்கிழமை காலை 6.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் குழுமிக்கரை ரோடு, அண்ணாநகர் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/08/2026 00:00)