Mr. Sudhakar Paranjothy

Sudhakar Paranjothy

Date of Birth: 15 August 1976 - Deceased: 22 January 2025

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ​Brampton - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுதாகர் பரஞ்சோதி அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், நாகமணி - மீனாட்சி தம்பதியினர் மற்றும் இராமசாமி - மாரிமுத்து தம்பதியினரின் அன்புப் பேரனும்,

பரஞ்சோதி - நீலா தம்பதியினரின் அன்பு மகனும்,

இருபாலையைச் சேர்ந்த கனகலிங்கம் - இராசநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுஜீகா (சசி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுருதி அவர்களின் பாசமிகு தந்தையும்,

தமிழ்வாணி, மதிவதனி, சிறீதர், திவாகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராஜா, சுரேந்திரன், சுஜீவன், குகவதனி, சுரேகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷாகெர், துவாரகா, சாயகா, ஹரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதி, ஆதவன், சயூத், சஜந், சஜித் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், பெரியப்பாவும்,

சிவநேசனின் சகலையும்,

பிரியாவின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 27-01-2025 திங்கட்கிழமை காலை 7.00 - 8.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 9.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/01/2025 05:00)