Mr. Sugenthan Thirunavukarasu
Date of Birth: 25 September 1986 - Deceased: 10 March 2026
ஜேர்மனி - Aalen ஐப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுஜிந்தன் திருநாவுக்கரசு அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின், அராலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற நமசிவாயம் - கனகம்மா தம்பதியினரின் அன்புப் பேரனும்,
திருநாவுக்கரசு - காலஞ்சென்ற சாரதாதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,
சதீஸ்கரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
றேகா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-03-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 - 10:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
