Mrs. Sugunawathi Sivabaleswararajah
(Retired Teacher)
Date of Birth: 26 February 1944 - Deceased: 15 September 2022
முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தர்மடம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுகுணவதி சிவபாலேஸ்வரராஜா அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கரைச்சிக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பதுமநிதி (கந்தர்மடம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. சிவபாலேஸ்வரராஜா RMO அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சீவன் (Network Manager, AMW, Colombo), தயாளன் (நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனுஷா, சட்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரிஷாந் (Royal College), அதிபன் (நியூசிலாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நேசமணி கேதாரநாதன், மகேஸ்வரன், Dr. விமலேஸ்வரன் RMO, காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவநாதன், குலநாதன், சக்திதேவி சிவகுமார், சுபத்திராதேவி மகேந்திரன், ஜெயநாதன், லலிதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவஸ்கந்தராஜா (கந்தர்மடம்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சுந்தராம்பிகை அவர்களின் சகலியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 8:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
www.tamilthakaval.org
