கனடா - Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுமன் பாலேஸ்வரன் அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலேஸ்வரன், சியாமிளா தம்பதியினரின் அன்பு மகனும்,
மனோவா, சக்ஷனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராஜேஸ்வரி, காலஞ்சென்ற சிவசோதி (தம்பன் - கதிரி), தவமணி விஜயவிக்ரம் - ராஜதுரை சோதி தம்பதியினரின் அன்புப் பேரனும்,
கேந்தேஸ்வரன், ஆசைமகள் – அமிர்தலிங்கம், நாகரட்ணம் - சுப்ரமணியம், சரோஜா - செந்தூரன், அபிஷா - ஜெயந்தன், அபர்ணா - விதுஷன், ஆசா - கண்ணன், தங்கா, பிரபாகரன், பகீரதன், பகீரதி, மதன் - ஹரிஷன், தனுஷன், தர்ஷன், சிந்துயா ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு மகேஸ்வரி தம்பதிகளின் கொள்ளுப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கணேஸ் - ஈஸ்வரி மற்றும் நாகராஜா – சிதம்பரபிள்ளை, திருசிற்றம்பலம் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கந்தசாமி, ரஞ்சினி, ராதிகா, சுதாகரன், கண்ணன், அனிதா, அபிஷன், ஜானகி, கேவின் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 9:00 மணி வரையும், 13-01-2025 திங்கட்கிழமை காலை 9:00 - 10:30 மணி வரையும் Complexe Funéraire Aeterna et Crématorium (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11:30 மணியளவில் 1759 Rue Antoine-Dalmas (1759 Rue Antoine-Dalmas, Laval, QC H7Y 2A8, Canada) இல் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org

