திருமதி. சுந்தரம்மா (கனகு)

சுந்தரம்மா (கனகு)

தோற்றம்: 05 செப்டம்பர் 1949 - மறைவு: 26 பெப்ரவரி 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் ஒக்காரை புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சப்பாணிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி திருமதி. சுந்தரம்மா அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வெங்கடாசலபுர கிராமம் காலஞ்சென்ற வையாபுரிப்பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலப்பிள்ளை  - பொன்னம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

இராஜரட்ணம், கிரிஜா (ராணி), சர்மிளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (Trust Steels), மோகன்ராஜ் (Kotmalea Hardware - Thalawakkala), ஆகியோரின் மாமியாரும்,

தங்கராஜ் ( Ajantha Steels), செல்லையா, சதாசிவம் (Manec Hardware) ஆகியோரின் சகோதரியும்,

பெரியசாமிப்பிள்ளை, மனோன்மணி (திருச்சி), காலஞ்சென்ற தெய்வானை ஆகியோரின் அண்ணியும்,

பெரியண்ணன்பிள்ளை, விஜயலட்சுமி, பங்கஜம், ராணி மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற கந்தசாமிப்பிள்ளை - செல்லம்மாள், காலஞ்சென்ற நடேசபிள்ளை - சீதாலெட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,

திசானி, ரசிகா, யஸ்வந்த் ஆகியோரின் அம்மாயியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-02-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் இல-168/8, பிக்கரிங்ஸ் ரோட், கொழும்பு-13 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-03-2025 சனிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, புகழுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2025 05:00)