திரு. சுந்தரலிங்கம் பன்னீர்ச்செல்வன்
(ஆசிரியர்- யா/நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம்)
தோற்றம்: 07 செப்டம்பர் 1973 - மறைவு: 12 ஆகஸ்ட் 2024
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல-59, மருதடி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் பன்னீர்ச்செல்வன் அவர்கள் 12-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம்-சரஸ்வதி தம்பதியினரின் இளைய புதல்வனும்,
திரு. திருமதி. ஜெயறஞ்சன்-திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜெயறஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,
லினோஷ்றாம், லக்ஷானி, கரிஷ்றாம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாமினி (ஐக்கிய இராச்சியம்), தமிழ்மாறன் (ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்ற குமுதினி (ஆசிரியை-ஐக்கிய இராச்சியம்), சாந்தி (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
திவாகர் (ஓமான்), ஜெயமாலினி, றஞ்சித், தேவகுமார், இதயகுமார் (அசோக்), மூர்த்தி (ஐக்கிய இராச்சியம்), கௌரி (ஐக்கிய இராச்சியம்), லக்ஸ்மன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் மைத்துனரும்,
கார்த்திகா, திவாகரன் (ஓமான்) ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம் மாணிக்கம் வைரவர் வீதியில் உள்ள அன்னாரின் மனைவி இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
