Mr. Sundaralingham Sundarakumar
(ஓய்வுநிலை மாகாணப் பொறியியலாளர் கட்டுமானப் பிரதிப் பணிப்பாளர்)
Date of Birth: 08 February 1961 - Deceased: 17 November 2025
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை கடற்கரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் சுந்தரகுமார் அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுந்தரலிங்கம் - யோகேஸ்வரி தம்பதியினரின் ஆசை மகனும்,
மகாதேவன் - ஞானாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இந்திரகுமாரி (ஜெயந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தகுமார், உதயகுமார், மாலதி, சுகந்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மலர், சரோஜினி ஆகியோரின் ஆசை மைத்துனரும்,
நேதாஜி (இலண்டன்), பிருதிவி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
தாரணி (இலண்டன்), பிரதீப்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திகழன், ஆரெயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ரவீந்திரன் (ரவி மாஸ்டர்), சுரேந்திரன் (நோர்வே), நிலாந்தன், மகா இந்திரன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
லதா, மீரா, விஜயா, யூடி (நோர்வே) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரனும்,
சஞ்சயன், கீர்த்தனா, தீபனா, கேகெயன், காங்கேயன், சரண்யா, ஜெகந்தன் ஆசைச் சித்தப்பாவும்,
தேஜாஸ்வர், பிரகதீஸ்வர், லோகதீஸ்வர், யுகதீஸ்வர், ஆர்த்திகா, சத்தியா, யுனிதா, ஜீனு ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-11-2025 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் இல-29 கடற்கரை வீதி, ஈச்சமோட்டையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் துண்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
