திரூ. சுந்தரலிங்கம் சுந்தரகுமார் (குட்டி அண்ணா)
மறைவு: 29 மே 2026
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுந்தரலிங்கம் சுந்தரகுமார் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை சுகயீனம் காரணமாக இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் - கண்மணி தம்பதியினரின் (உடுப்பிட்டி) அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன் - பார்வதி தம்பதியினரின் மருமகனும்,
பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
மாதங்கி, மாதமி (மருத்துவபீட மாணவர்கள்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுகுமார், சூரியகுமார், சுரேஸ்குமார் மற்றும் சுபேந்திரகுமார், ஜனார்த்தனி, ஜனரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விமலாம்பிகை (ரதி), கனகேஸ்வரி, சற்குணராஜா, சாந்தி, நிரஞ்சன் ஆகியோரின் மைத்துனரும்,
முத்துக்குமாரு கோபாலகிருஷ்ணன் (இசைவாணர் கண்ணன்) அவர்களின் மருமகனும்,
பற்குணன் (ராதா மேத்தா), மகாலிங்கம் பரமேஸ்வரி (குயிலா-மகாமினி), பரந்தாமன் (அரி), பக்தவக்சலம் (அரன்), அருணன் (பாபு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 996, காங்கேசன்துறை வீதி,
நாச்சிமார்கோயிலடி, யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
