திருமதி. சுந்தரம் சுபத்திராதேவி

(இளைப்பாறிய ஆசிரியை - யாழ். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம், யாழ். உரும்பிராய் இந்து கல்லூரி)

சுந்தரம் சுபத்திராதேவி

தோற்றம்: 07 ஏப்ரல் 1951 - மறைவு: 16 பெப்ரவரி 2025

யாழ். உரும்பிராய் கிழக்கு, அரச வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரம் சுபத்திராதேவி அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை - சிவபாக்கியவதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து - சிதம்பரம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

சுந்தரம் (இளைப்பாறிய பிராந்திய நிர்வாக உத்தியோகத்தர், தபால் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜிதா (ஆசிரியை - யாழ். உரும்பிராய் இந்துக் கல்லூரி), சுஜன் (Double - S நிர்மாண ஒப்பந்தகாரர் - உரும்பிராய்) ஆகியோரின்  பாசமிகு தாயாரும்,

ரமணிதரன் (ஆசிரியர் - யாழ்.கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி), விஜயதர்சினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - யாழ். ஊரெழு கணேசா வித்தியாசாலை) ஆகியோரின் அன்பு மாமியும்,

ரதுக் ஷன், தக் ஷஜா, கென்சிகா, தசாரா, டாருகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

சுகுணதேவன் (கனடா), சுசீலாதேவி (கனடா), சுகுணராஜன் (கனடா), பாலாம்பிகை (கனடா), ஜெகதாம்பிகை (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-02-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/02/2025 05:00)