Mr. Sundarampillai Jeganathan

(உரிமையாளர் - YR Trading, கொழும்பு 15)

Sundarampillai Jeganathan

Deceased: 20 June 2025

இந்தியா - திருச்சி மாவட்டம திருமனூர் கிராமம் சமயந்திரி கோத்திரம், மஸ்கெலியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - 15 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரம்பிள்ளை ஜெகநாதன் அவர்கள் 20-06-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை - முத்தம்மாள் (மஸ்கெலியா - யோகா ஸ்டோர்ஸ்) தம்பதியினரின் மகனும்,

கந்தசாமிப்பிள்ளை - நாகம்மாள் தம்பதியினரின் மருமகனும்,

ஜெகதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

யோகா, அமுதா, தர்ஷனி, தயானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காயத்திரி, ஞானசேகரன் (கஹவத்த), கிரி (செட்டியார் தெரு), சுதாகரன் (சுதா டிரேடர்ஸ் - கொழும்பு) ஆகியோரின் மாமனாரும்,

சரோஜா (இந்தியா), சுப்பிரமணியம் (கொழும்பு), காலஞ்சென்ற கந்தசாமி (இராகலை), ரவிச்சந்திரன், சாரதாம்பாள், பத்மகாந்தி, யோகேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற வள்ளியம்மை ஆகியோரின் சகோதரரும்,

ராமசாமிப்பிள்ளை (இந்தியா), காலஞ்சென்ற சொக்கலிங்கம்பிள்ளை ஆகியோரின் மாப்பிள்ளையும்,

காலஞ்சென் செல்லம்மாளின் மைத்தனுரும்,

பாலசுப்பிரமணியத்தின் சகலையும்,

காலஞ்சென்றவர்களான மூக்கப்பிள்ளை - செல்லம்மாள் (தங்கமலை, ஹப்புத்தளை), காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை - சிவபாக்கியம் (மஸ்கெலியா), ராமலிங்கம்பிள்ளை - கோமதி (கொழும்பு), ஜெயபிரகாஷ் - கமலா (வத்தேகம) ஆகியோரின் சம்பந்தியும்,

அஹன்யாவின் பாட்டாவும்,

கவினாஷ், விஷால், நிஜய், பிரணவ், ஹனுஷிகா, ஹரின், மாதவ், அஸ்வந்த், வரிஷ்ணவ் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-06-2025 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டி மின் மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/06/2025 04:00)