Mrs. Sundaramurthy Dhananayaki
Deceased: 20 April 2025
யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரமூர்த்தி தனநாயகி அவர்கள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாப்பிள்ளை (கந்தானை கந்தையா - பிரபல வர்த்தகர்) - நேசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா - மீனாட்சி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வம், நாகநாதன், ஸ்ரீமுத்துகுமாரன், ஸ்ரீதேவி ஆகியோரின் அன்பு தாயாரும்,
சிவநேசன், பிரதிகா, புஷ்பராணி, ரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மீனா, கேதவன், லக்சுமி, கிருஷ்ணா, விதுரன், விசாளா, வினோத் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
அஹானா, ஆரியன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நீலிபந்தானை காரைநகரில் 22-04-2025 செய்வாய்க்கிழமை காலை 7:00 - 9:00 மணி வரை நடைபெற்று, திருவுடல் சம்பாலேடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
