திருமதி. சுந்தரலிங்கம் செல்வப்பாக்கியம்

(New Alexandra Gram Stores நிறுவனத்தின் உரிமையாளர்)

சுந்தரலிங்கம் செல்வப்பாக்கியம்

தோற்றம்: 29 செப்டம்பர் 1950 - மறைவு: 19 மே 2026

யாழ். மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரலிங்கம் செல்வப்பாக்கியம் அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா-சின்னம்மா (தங்கம்) தம்பதியினரின் அன்பு மகளும்,

வளர்மதி, மைதிலி, செந்தில்கண்ணன், செந்தில் கிருஷ்ணன், அம்பிகை( கல்பனா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகபூரணி, காலஞ்சென்ற குணரெட்ணம், மங்களேஸ்வரன், செல்வராணி, சிவகுமார் (குமார்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் (Araliya Hall) காலை 9.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, மாலை 5.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சுஜீவன்:- +94 77 895 8980

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/05/2026 00:00)