Mr. Sundaram Rasarathinam
Date of Birth: 15 February 1932 - Deceased: 02 June 2023
யாழ் கொல்லங்கலட்டி தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுந்தரம் இராசரத்தினம் அவர்கள் 02-06-2023ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னப்பொடி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகௌரி, சிவகுமார் (ஜேர்மனி), திருக்குமரன் (பிரான்ஸ்), இராஜகௌரி (பிரான்ஸ்)
ஞானகௌரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லம், சின்னத்தங்கம், மாமாங்கம், பாக்கியம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெகநாதன் (பாபு, இலங்கை மின்சார சபை, ஓய்வுதியர்), அனுஷியா, சரணியா, ராஜ்கண்ணன், பாலமுரளி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜானனி (அபிவிருத்தி உத்தியோகத்தர், வலயக்கல்வி அலுவலகம், மன்னார்), பிரசன்னா, மயூரன், கலைவாணி, திவானி, லாவன்யா, துஷ்யந்தன், சௌமியா, அஸ்வினி, துஷாந், அபிசன், மீனுஜா, கிஷாந், கஜிந், அஜந், தனுஷாந்தி, பிரவீணன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 06-05-2023ம் திகதி செவ்வாய்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கீரிமலை செம்மண் வாய்க்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2023 10:01)
