Mr. Suntharalingham Vijyakumar

Suntharalingham Vijyakumar

Date of Birth: 10 October 1960 - Deceased: 16 September 2025

யாழ். இணுவில் கிழக்குப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு காங்கேசந்துறை வீதியைப் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் விஜயகுமார் அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் - சிதம்பரேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தையா - ராசமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்து (ஜேர்மனி), ராகுலன் (ஜேர்மனி), விதுஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சதீஸ் (ஜேர்மனி), வாசுகி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நவசிவராசா, மல்லிகாதேவி, புஸ்பராசா, காலஞ்சென்ற இராசகுமார் (ஜேர்மனி), உதயகுமார் (ஜேர்மனி), பாலகுமார் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற கிருஷ்ணானந்தன், குணானந்தன், சுதாகினி ஆகியோரின் மைத்துனரும்,

அக்‌ஷனா, ஆரோகி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2025 04:00)