Mr. Suntharam Shanmugavadivel
Date of Birth: 23 July 1953 - Deceased: 25 February 2025
யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரம் சிற்பனை முருகமூர்த்தி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரம் சண்முகவடிவேல் அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம் - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை (பொன்னையா) - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பன்னீர்ச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்ஜினி, சுகந்தினி, சுரேஷ்குமார், ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நீலாம்பிகை, ஞானசூரியன், ஞானாம்பாள் (பொற்கொடி), கருணைநாயகி (பவளம்), காலஞ்சென்ற தங்கவடிவேல் மற்றும் லோகநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற பகீரதலட்சுமி, ஜெயமோகனரெட்ணம், ரமணி, தெய்வேந்திரன், பாசுபதம், காலஞ்சென்ற காசிலிங்கம், பன்னீர்ச்செல்வம், அருட்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இதயவண்ணன், உதயகுமார், தர்ஷிகா, புஸ்பலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபித்தா, லகீஷன், சிந்துசன், மிதுஷ்கா, கர்விஷ், நிகாஷ், அனனியா, ஷஜேத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணி முதல் பொரளை ஜெயரெட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 03:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
