திரு. சுப்பையா விஸ்வநாதன்
மறைவு: 23 ஆகஸ்ட் 2025
கம்பளையைப் பிறப்பிடமாகவும், கஹதுடுவ கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா விஸ்வநாதன் அவர்கள் 23-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா - பார்வதி (கம்பளை) தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா - இராஜேஸ்வரி (ரத்தோட்டை - மாத்தளை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கிருஸ்ணகுமாரி (மனோ) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷினி, நிராஜ் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
போதனாசுந்தரியின் அன்பு மாமனாரும்,
சராவின் அன்புத் தாத்தாவும்,
சரோஜா, இந்திரா, போஸ், இராஜேந்திரன், சேகர், சகுந்தலா, விஜயலட்சுமி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:30 மணியளவில் 461/B/453, City of Life, கஹதுடுவ வடக்கு, பொல்கஸ்ஓவிட்டையில் நடைபெற்று, திருவுடல் வேதர மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
