Mr. Suppaiaypillai Ganesan
(S.S.N சுடலைமுத்து செட்டி & Co - ஆட்டுபட்டித்தெரு, கொழும்பு - 13)
Deceased: 07 March 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் வேங்கட்த்தானூர் கிராமத்தை பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா பிள்ளை கணேசன் அவர்கள் 07-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையாபிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்றவர்களான கருப்பண்ணபிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சோமேஸ்வரன், குகனேஸ்வரி, கோபிநாதன், பிரதீபன், லலித்குமார் ஆகியோரின் அன்பு தந்தையும்,
தி.இராமநாதன் (மதுஷா டெக்ஸ்டைல்), மேகலா, சஜீவனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற கந்தசாமி பிள்ளை, செல்லம் ஆகியோரின் சகோதரரும்,
ரா. திருப்பதியாபிள்ளை (கொழும்பு), காலஞ்சென்றவர்களான ந. கருப்பையாபிள்ளை (பெரம்பலூர்), Y. காந்தி (பலகொல்ல) ஆகியோரின் சம்பந்தியும்,
கவினேஷன், லோஷன், அக்ஷிதா, உதீஷா, உபேந்ரா ஆகியோரின் பாட்டனாரும்,
உருத்ரன், அக்ஷயா, அச்சுதன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2025 சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் (இல - 37,1/A, எலிபேங்க் வீதி, கொழும்பு - 15) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் பொரளை புதிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
