Mrs. Suppaiyappillai Divamalar
Date of Birth: 10 March 1951 - Deceased: 19 May 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் கிராமம், கண்டி அம்பிட்டியவைச் சேர்ந்தவரும், வத்தளையை வசிப்பிடமாக கொண்டிருந்தவருமான தெத்து மங்களுத்துடையான் கோத்திரம் காலஞ்சென்ற சுப்பையாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி திருமதி. தெய்வமலர் அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 1.40 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமிபிள்ளை - முத்துக்கன்னு தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்பிள்ளை - தைலம்மை தம்பதியினரின் மருமகளும்,
சுபராஜ் பொன்ராஜ், தவமலர், சுமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலராணி, கணேசன் (அம்பிட்டிய), ரவீந்திரம் (New Thuthi Transporters - Warakapola) ஆகியோரின் மாமியும்,
மாரியாயி காலஞ்சென்ற, நடேசன் (கணேசன்), கமலம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மூக்காயி செல்லம்மாள், வையாப்புரிபிள்ளை, மற்றும் துரைசாமி பிள்ளை (கொழும்பு), காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை, சிகாமணி, குமாரவேல் ஆகியோரின் மைத்துனியும்,
சிவபாக்கியம், மகேஸ்வரி ஆகியோரின் ஒப்பிடியாவும்,
ஜயனியின் அப்பாயியும்,
கோகுலவதனி, தனுஷ்காந், கிருத்திகன், தசாங்கன், திலுக்சன், துதிகேஷ் ஆகியோரின் அம்மாயியும்,
வித்யுத்தின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் (Mahinda Funerals, Wattala) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-05-2026 புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் (வத்தளை) திருவுடல் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 5/12, குணசேகர அவென்யூ,
நீர்கொழும்பு வீதி, வத்தளை.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
