Mr. Suppaiyappillai Sivarajah
Date of Birth: 02 November 1965 - Deceased: 06 October 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் சாலப்பட்டி கிராமம், தலவாக்கலை நானுஓய பிரிவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பையாப்பிள்ளை சிவராஜா அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையாப்பிள்ளை - காமாட்சியம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம்பிளை - பரமேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
தனலெட்சுமி (ராணி) அவர்களின் அன்பு கனவரும்,
ரீத்திகாவின் அன்பு தந்தையும்,
பொன்மணி, பாலசுப்பிரமணியம், புஷ்பராணி, சங்கரி, ரவிக்குமார் (ராஜா-SRK Jewellery) ஆகியோரின் சகோதரரும்,
சண்முகம், புஷ்பராஜ், யோகேஸ்வரன், சித்ரா, கோகிலா அவர்களின் மைத்துனரும்,
இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, கஜலம்சுமி, சந்தானலட்சுமி, யோகநாதன் ஆகியோரின் கொழுந்தனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-10-2026 புதன்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் வத்தளை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-10-2026 வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் கெரவலப்பட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
தனலெட்சுமி:- +94 77 057 1601
ரவிக்குமார்:- +94 77 724 7070
www.tamilthakaval.org
