​செல்வி. சுரேஸ்குமார் மா்ஷிகா

சுரேஸ்குமார் மா்ஷிகா

தோற்றம்: 08 மே 2014 - மறைவு: 23 ஜூலை 2024

பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. மர்ஷிகா சுரேஷ்குமார் அவர்கள் 22-07-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார், குடத்தனை வடக்கைச் சேர்ந்த இராமநாதன் சுரேஷ்குமார் மற்றும் மாதகல் புக்கம் பிலோவில் பிருந்தா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

இராமநாதன் சகுந்தலாதேவி, காலஞ்சென்ற அருந்தவராசா, லூத்துநாயகி தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,

ஆஷிகா, அனிக்கா, ஆரிக் ஜோசப் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார், விஜயகுமார், தேனுஜா ஆகியோரின் பெறாமகளும்,

பிரசாத், பிரதாப், பிரசாந், சர்மிளா, பிரியா, தனுஜா ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 31-07-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 11.30 மணியளவில் St Michael The Archangel, Tokyngton (Wembley St. Michaels Ave, Wembley HA9 6SL, United Kingdom) இல் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் Carpenders Park Lawn Cemetery (Oxhey Ln, Watford WD19 5RL, United Kingdom) இல் நல்லடக்கம் செய்யப்படும், அதனை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணியளவில் Aldenham Social Club (Church Ln, Radlett, Watford WD25 8AY, United Kingdom) இல் மதியபோசணம் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/07/2024 04:00)