திரு. சூரியதேவானந்தன் பொன்னுத்துரை
தோற்றம்: 14 செப்டம்பர் 1941 - மறைவு: 10 டிசம்பர் 2020
யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சூரியதேவானந்தன் பொன்னுத்துரை அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை கனடா Scarborough வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சரசபூபதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சற்குணசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி(ஜேர்மனி), காலஞ்சென்ற கௌரிதேவி, கதிர்காமநாதன்(கனடா), சிவலிங்கநாதன்
(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குருதேவன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சகாதேவன், வாமதேவன், பஞ்சதேவன் மற்றும் இந்திரதேவன்(இலங்கை), மகாதேவன்(ஜேர்மனி), இந்திராணி(கனடா), ஜெயராணி(இலங்கை), உதயராணி(கனடா), யோகராணி(சுவீடன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோபாலகிருஷ்ணன்(ஜேர்மனி), ஜெயசீலன்(ஜேர்மனி), கிருஷ்ணவேணி(கனடா), ஷர்மிலி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
சிந்தியா ரூபன், அரவிந்தன், டிலக்ஸி மயூரன், ஜனார்த்தன், பிரேமிக்கா, சியான், பிரியானா, நிதேஷ், நிருத்தியா ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
அகரன், விதுஷன், சஞ்சனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய பேரிடர் காலத்தை முன்னிட்டு நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் சைவசமய ஆகம விதிகளின்படி இறுதிக்கிரியை நடைபெறும்.
www.tamilthakaval.org
