திருமதி. சுசிலாதேவி ஜெகதீசன்
தோற்றம்: 16 ஜூலை 1950 - மறைவு: 02 பெப்ரவரி 2026
சென் லூசியஸ் வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு-13 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சுசீலாதேவி ஜெகதீசன் அவர்கள் 02-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராசநாயகம் - ஜானகி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற எஸ். ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும்,
மனோஜ்குமார், தினேஷ், கீர்த்திகா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
மெண்டியின் அன்பு மாமியாரும்,
ஜோ, ஜேம்ஸஸ், ஜெக், சஞ்ஜெய் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-04-2026 புதன்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
