திருமதி. சுசீலாதேவி நடராஜா
தோற்றம்: 29 ஜனவரி 1935 - மறைவு: 17 ஆகஸ்ட் 2026
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா - Markham தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுசீலாதேவி நடராஜா அவர்கள் 17-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தில்லைநாதர் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா (இளைப்பாறிய அதிபர்-கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கீதாஞ்சலி (கனடா), காலஞ்சென்ற வசந்தா, வனிதா (சுவிஸ்), சுரேஸ்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விநாயகமூர்த்தி (கனடா),
தவயோகராஜா (கொழும்பு), மகேஸ்வரன் (சுவிஸ்), தனுஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், தனலட்சுமி மற்றும் வன்னியசிங்கம், கமலாம்பிகை, பூலோகநாதன், காலஞ்சென்றவர்களான இந்திரா, சிறிகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனன், நிரோஜி, அஜந்தன், அகல்யா, ரோய்ஸ், அபிறாஜிதன், நிரோஸ், பிரசாந்தினி, யாதேஸ், டிலக்ஷி, அஸ்னா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹன்ஸ், அவர்களின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கீதா (மகள்):- +1 647 657 3614
தவயோகராஜா (மருமகன்):- +94 75 536 6902
வனிதா (மகள்):- +41 765 311 823
சுரேஸ்குமார் (மகன்):- +33 652 370 361
www.tamilthakaval.org
