திருமதி சுசீலனாதேவி தில்லைராஜன்

சுசீலனாதேவி தில்லைராஜன்

தோற்றம்: 23 பெப்ரவரி 1957 - மறைவு: 30 ஏப்ரல் 2024

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுசீலனாதேவி தில்லைராஜன் அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - நாகம்மா தம்பதியினரின் இளைய மகளும்,

காலஞ்சென்றவர்களான பருத்தித்துறை மாதனையூர் இராசதுரை - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தில்லைராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, சுப்பிரமணயிம் (C.T.B. மணியம்), யோகமலர், இரத்தினசிங்கம், பேபிரரோஜா, சந்திரசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயாநிதி, நந்தினி, சதீஸ்குமார், சுசியந்தினி, சுஜீத்தா, பிரதிஸ்குமார், பிருந்தா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சிந்துஜா, கிரிசாந், ரவிசாந், வினோசாந், ரகுசாந், பரிசாந், சரத்பாபு, சசிகுமார், சங்கீதா, விவேக் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், தேவமனோகரன், சகுந்தலாதேவி, வசந்தி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2024 வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-

நீர்வேலி வடக்கு, நீர்வேலி.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2024 04:00)