Mrs. Suthamathy Selvanayagam
(Retired Teacher)
Date of Birth: 04 June 1934 - Deceased: 20 April 2025
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், அம்பனை மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுதாமதி செல்வநாயகம் அவர்கள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வன்னியர் கந்தப்பிள்ளை - பொன்னு தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்ற சி. செல்வநாயகம் (ஓய்வுபெற்ற அதிபர் - யாழ். தந்தை செல்வா தொடக்க நிலைப்பள்ளி) அவர்களின் ஆசை மனைவியும்,
கணேசானந்தன் (பொறியியலாளர் - கனடா), மதிவதனி (வைத்தியர் - கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை), குகனாதன் (கனடா) ஆகியோரின் அன்னையும்,
பராபரன் (கனடா), திவ்வியா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சீனியம்மாவும்,
செல்வநீதன், நவநீதன், கயல், பிறிஜேஸ், பிறணேஸ், சேயோன், ரோகித், வருண், அனன்யா, எழில் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற வீனாசித்தம்பி, இரத்தினம், வள்ளியம்மை, ராணி, நிலாமதி, யோகமதி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-04-2025 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
