Mrs. Suthanthirachchelvi Rathakrishnan (Sutha)
(ஓய்வுபெற்ற ஆசிரியை - வத்தளை புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயம்)
Date of Birth: 16 October 1952 - Deceased: 18 October 2025
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல-648/7, புனித ஜீட் மாவத்தை, மாபோல வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுதந்திரச்செல்வி ராதாகிருஷ்ணன் அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஏ.சி.நாகராஜா - இரட்ணதேவி தம்பதியினரின் மருமகளும்,
சி.என். ராதகிருஷ்ணன் (ஓய்வுபெற்ற Chief Process Officer மற்றும் தற்போதைய முகாமைத்துவ ஆலோசகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நிருஸ்ஷா (சிரேஷ்ட முகாமையாளர் - Ceylinco Life), சதீப் (பிராந்தியா முகாமையாளர் - Ceylon Tobacco Company) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
லட்சுமிராஜின் (சிரேஷ்ட முகாமையாளர் - IFS) மாமியாரும்,
காலஞ்சென்ற வாசுகி, பஹிரதன் ஆகியோரின் சகோதரியும்,
ஜெய்பாலகிருஷ்ணன், ஜெயரூபி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் இல- 483, பௌத்தோலக மாவத்தை, கொழும்பு-08, ஜெயரட்ண ரெஸ்ட்பெக்ட் ஹோம் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-10-2025 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
