Mr Suvampillai Marisalen (Jesu Master)

(ஓய்வுபெற்ற அதிபர் (SLPS 1))

Suvampillai Marisalen (Jesu Master)

Date of Birth: 16 January 1938 - Deceased: 10 April 2024

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், இல- 18, மத்தியூஸ் வீதி சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுவாம்பிள்ளை மரிசலீன் 10-04-2024 புதன்கிழமையன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை - சலோமை தம்பதியரின் மகனும்,

காலஞ்சென்றவர்களான பத்திநாதர் - பொன்னுமுத்து தம்பதியரின் மருமகனும்,

லில்லியம்மாவின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பெனடிற். செல்வராசா, பிலிப் (காணிக்கை), செல்வராணி, புஸ்பராணி மற்றும் பேதுருப்பிள்ளை (சின்னராசா), திரேசம்மா (கனடா), லூத்தம்மா, தங்கரட்ணம், லீலா, தங்கராணி ஆகியோரின் சகோதரரும்,

ஜோய்றோஸ் (ஜெயந்தி), ஸ்பெல்மன் (ஆசிரியர் - சுண்டுக்குளி மகளிர் கல்லூரி), றூபின் றோஸ் (வசந்தி - அதிபர் அல்மினா முஸ்லீம் மகா வித்தியாலயம் - குருணாகல்), பிறிம் றோஸ் (சுகந்தி - ஆசிரிய ஆலோசகர்-கணிதம் - தீவக வலயம்), சிபிலா றோஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் வேலணை), திலீபன் (கட்டட பட வரைஞர் - ஓமான்), ஸ்ரீபன் (வைத்தியர் - மன்னார் மாவட்ட வைத்திய சாலை), ஜஸ்டின் (பொறியியலாளர் - லண்டன்) ஆகியோரின் தந்தையும்,

ஞானேஸ்வரன் (ஆசிரியர் - சென்ஜோசப் வித்தியாலயம் கொழும்புத்துறை), சாமர விஜயசிங்கா (விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் - விவசாய அமைச்சு குருணாகல்), பாலகுமாரி (முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் - மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்), கீதபொன்கலன் (ஆசிரியர் - யா/கொட்டடி நமச்சிவாய வித்தியாலயம், இயக்குநர் மார்ஷல் அக்கடமி), சிவஸ்கரன் (எழுதுவினைஞர் - நீதிமன்றம் சாவகச்சேரி), ஜெயந்தி (ஆசிரியர்- பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி), பஞ்சகல்யாணி (வைத்தியர்- அம்பன் வைத்தியசாலை), ஜெயந்தினி (அழகுக்கலை நிபுணர்) ஆகியோரின் மாமனாரும்,

அருண் (மொறட்டுவ பல்கலைக்கழகம் - பொறியியல் பீடம்), அஸ்மிதா, செரோன், ஆன்பெலிசிற்றா, அனோஜன், கிருணி, ஹெப்சிபா, அன்றியா, ஹரிந்து, புராதனி, டியோன், எய்டன், அரண் சியோன், துஷான் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் மரியன்னை தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2024 04:00)