திரு. சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் பேர்ணாடியஸ்

(முன்னைநாள் இ.போ.ச. அத்தியட்சகர் - முல்லைத்தீவு)

சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் பேர்ணாடியஸ்

தோற்றம்: 20 மே 1934 - மறைவு: 29 ஜூன் 2026

யாழ். கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு - மாமூலையைப் வாழ்விடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் பேர்ணாடியஸ் அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் - அந்தோனியாப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், மாமூலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை றிச்சேட் - மாக்கிறேற் செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

அன்னமணி (இரத்தினம், ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

வில்லியம் கெனடி(சட்டத்தரணி- கனடா), ஜோசெப் கெனடி(சுவிஸ்), கரோலின்(கனடா), யூடித்யஸ்மின்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மல்றோணி, யஸ்மின், அமலகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஜோசெப் மரியதாஸ், பூமணி மரியநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசநாயகம், இராசமணி, செல்வமணி, பாக்கியமணி, நேசமணி மற்றும் தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான குணமணி, ஆசீர்வாதம், அமிர்தநாதர், மரியநாயகம், அல்பிரட், துரைசாமி, மற்றும் அம்பிகா ஆகியோரின் அன்புச் சகலனும்,

கிறிசாந், கிறிசாறா, அன்ரனி, கிறிஸ்ஜோன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

லக்சிகா, லக்சன், அந்தியா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

ரூபா, நிமால், விமால் ஆகியோரின் அன்பு மாமாவும், காலஞ்சென்ற ரவி மற்றும் ராசாத்தி, ஜீவா, கல்பனா, தர்சன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-07-2026 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 04-07-2026 சனிக்கிழமை காலை 7:30 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 மணியளவில் St. Rose of Lima Parish (3216 Lawrence Ave E, Scarborough, ON M1H 1A4, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, முற்பகல் 11:30 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/07/2026 00:00)