Mr. Swamynathan Balendran

(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்)

Swamynathan Balendran

Date of Birth: 14 June 1940 - Deceased: 20 October 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுவாமிநாதன் பாலேந்திரன் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் - ஜெயமணி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகம்மா தம்பதியிரின் அன்பு மருமகனும்,

மனோகராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினி (பிரான்ஸ்), சத்தியன் (இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்), ரமணன் (ஸ்ரீலங்கா டெலிகொம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாளன் (பிரான்ஸ்), பூமணி (ஆசிரியை - யாழ். இந்து மகளிர் கல்லூரி), அனித்தா (ஆசிரியை - கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரன், குலேந்திரன், குணேஸ்வரி, விஜேந்திரன் மற்றும் இராஜேஸ்வரி (கொழும்பு), நேசேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறந்த சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், சுந்தரலிங்கம், கணேசலிங்கம், செல்வலக்ஷ்மி, யோகலக்ஷ்மி ஆகியோரின் மைத்துனரும்,

லக்ஷ்மன், பிரணவி, பிரகாஷன், கேஷாயினி, கேஷிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.30 மணியளவில் திருவுடல்  செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

"அன்னை இல்லம்”

G.P.S வீதி, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2025 00:00)