திரு. தே. ரவிச்சந்திரன்
தோற்றம்: 12 ஆகஸ்ட் 1966 - மறைவு: 28 பெப்ரவரி 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் ஓமாந்தூர் கிராமம், கொழும்பைச் சேர்ந்த திரு. தே. ரவிச்சந்திரன் அவர்கள் 28-02-2025 வெ்ள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.
அன்னாா், காலஞ்சென்றவர்களான தேவராயப்பிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நடராஜபிள்ளை - காமாட்சி அம்மாள் (கெட்டவல) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நளனி அவர்களின் அன்புக் கணவரும்,
ரிந்தியாவில் அன்பு தந்தையும்,
சுப்பிரமணியம், காலஞ்சென்ற ராஜேந்திரன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற பாலகிருஸ்ணன், கணேசன் (கொழும்பு), காலஞ்சென்ற நாராயணசாமிபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மகேந்திரனின் (கண்டி) மாப்பிள்ளையும்,
காலஞ்சென்ற செல்வராஜ் (18 ஆம் கட்டை, கலஹா), ஜெயேந்திரா, ஆனந்தி, புஷ்பகீதா, கமலேஸ்வரி, மஞ்சுளாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-03-2025 சனிக்கிழமை பிற்பகல் 3.15 மணி முதல் புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
