திருமதி. தம்பையா கண்ணம்மா

தம்பையா கண்ணம்மா

தோற்றம்: 05 அக்டோபர் 1942 - மறைவு: 03 ஜூன் 2025

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பையா கண்ணம்மா அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸ் - Bern இல் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா - சீதேவிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பையா (பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரேமானந்தன், விஜியானந்தி, காலஞ்சென்ற நித்தியானந்தன், சுபானந்தி, ஶ்ரீகுகானந்தன் (Roger), சுசியானந்தி, சிவானந்தன், துஜானந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலாரஜனி, ஶ்ரீதரன், கேதீஸ்வரன், தயானி, கனகலிங்கம், பிரியதர்சினி, வாஹீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்மவதி (சுவிஸ்), தனலட்சுமி (கனடா), காலஞ்சென்ற சிவபாக்கியம், அம்பிகாவதி (கனடா), பிரபா (கனடா), மகாலட்சுமி (சுவிஸ்), வசந்தகுமார் (சுவிஸ்), சண்முகராஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கதிராசிப்பிள்ளை, செல்லமுத்து, இளையதம்பி, விசுவலிங்கம், செல்லாச்சி, வேலாயுதம், சின்னம்மா மற்றும் செல்லையா, பாலசுப்ரமணியம், சண்முகராஜா, இலங்கைநாதன், சரோஜாதேவி, கிருபானந்தன், ஜெயலலிதா, வசந்தராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டனுசன், பிரவீனா, நிதர்சனா, கீர்த்தனா, சங்கீத், நிவேதா, நிவேகா, அஜின், அக்‌ஷா, ரெஜின், ஆரித், இஷான், கீர்த்திகா, கார்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-06-2025 புதன்கிழமை மற்றும் 05-06-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:00 - 8:00 மணி வரை Bremgarten cemetery (Murtenstrasse 51, 3008 Bern, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 06-06-2025 மதியம்1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/06/2025 04:00)