திருமதி தளையசிங்கம் மகேஸ்வரி
தோற்றம்: 17 பெப்ரவரி 1949 - மறைவு: 12 மே 2026
யாழ்ப்பாணம், வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சபாபதி றோட், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், தற்போது இந்தியா, சென்னை, வளசரவாக்கம் – மதுரவாயலில் வசித்து வந்தவருமான திருமதி தளையசிங்கம் மகேஸ்வரி அவர்கள் 12.06.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் – நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் – விஷாலாட்சி (தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னார் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் பிரபல மரக்கறி வர்த்தகராக விளங்கிய காலஞ்சென்ற தளையசிங்கம் (மண்கும்பான்) அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.
அன்னார் அஜந்தினி, பாஸ்கரன், காலஞ்சென்ற றஜனி (றாஜி), பிரசாந்தினி மற்றும் திவாகரன் ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்.
அன்னார் சசிகரன், வனஜா, காலஞ்சென்ற சுபாஸ்கரன், கோகிலரூபன் மற்றும் பிரியதர்ஷினி (பிரியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னார் டிலக்ஷானா, டிலக்ஷ்ன், அபினா, அஜினா, மகதி, தேவ்ஷாந்த், சுதஷ்ஷியா, அஸ்விதா, விதுர்ஷிகா, தனுஷன், அக்ஷயா, அஜிஷன் மற்றும் திவ்ஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியாரும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற பரமேஸ்வரி, துரைராஜா, நாகேஸ்வரி, பரமதேவன் மற்றும் கணேஸ் சற்குருநாதன் (சண்முகம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற முத்துகுமாரு, சின்னத்துரை, இந்திராணி மற்றும் இரத்தினாம்பாள், பராசக்தி, சிவஞானவதி (கௌரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்பு, பாசம், கருணை மற்றும் தியாகத்தின் உருவமாக வாழ்ந்த எங்கள் அன்புத் தாய், மாமியார், பாட்டி, சகோதரி மற்றும் உறவினரான திருமதி தளையசிங்கம் மகேஸ்வரி அவர்களின் பிரிவு எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது அன்பான வார்த்தைகள், கனிவான புன்னகை, குடும்பத்தின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் அனைவரையும் அரவணைத்த உயர்ந்த பண்பு என்றும் எங்கள் நினைவுகளில் நிலைத்திருக்கும்.
அவர் எம்முடன் இல்லாவிட்டாலும், அவர் விதைத்த அன்பும் நற்பண்புகளும் எங்கள் வாழ்வில் என்றும் ஒளிவிளக்காக வழிகாட்டும்.
“மறைந்தாலும் மறையாத நினைவாய்,
பிரிந்தாலும் பிரியாத உறவாய்,
எங்கள் இதயங்களில் என்றும் வாழ்வீர்.”
இறுதிக்கிரியைகள்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஓம் சாந்தி!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2026 17:39)
