திரு. தம்பையா நடேசலிங்கம்
மறைவு: 25 ஜூலை 2026
யாழ். காரைநகர் களபூமி திக்கரையைப் பிறப்பிடமாகவும், திக்கரை, வண்ணார்பண்ணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பையா நடேசலிங்கம் அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - நாகம்மா தம்பதியினரகன் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயக்குமார் (முகமையாளர் SVM Pvt. Ltd- கொழும்பு), திருமகள் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருட்செல்வம் (இலண்டன்), தனுஜா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தன்சி, குருதாஸ், குருராம், சஸ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான இந்திராணி, தியாகலிங்கம், யோகராணி மற்றும் அம்பிகைபாகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மபாலன், விஜயரட்ணம், சத்தியலிங்கம், கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, இரதிஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி, இரத்தினபூபதி, செல்வராணி, வசந்தகுமாரி, நல்லலிங்கம், மகேந்திராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 22, பிரப்பன்குளம் லேன்,
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
