திரு. தம்பையா அருளம்பலம்
மறைவு: 26 ஜனவரி 2026
யாழ். காரைநகர் களபூமி பாலாவோடை புதுறோட் சந்தம்புளியடியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா அருளம்பலம் அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பதிகளான தம்பையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
ரேஜினான் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாத், கவிதா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
Dr. அருள்நேசன், அனுசியா ஆகியோரின் மாமனாரும்,
இந்திரானி (பாரிஸ்), காலஞ்சென்ற சர்வானந்தன், கணேசலிங்கம்,தயாபரன் (ஆதித்தன் பத்திரிகை ஆசிரியர் - சுவிஸ்), அருளானந்தம் (சூட்டி - பாரிஸ்), அருட்சோதி (இலங்கை), கமலாம்பிகை (இலண்டன்), லோகேஸ்வரி (இலண்டன்), பத்மாதேவி (இலண்டன்)ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
