திருமதி. தம்பையா மனோன்மணி
மறைவு: 05 செப்டம்பர் 2025
யாழ். காரைநகர் முல்லைப்பிலவை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பையா மனோன்மணி அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - பொன்னுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், சுந்தராம்பாள், தியாகேஸ்வரி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், யோகேஸ்வரி, உருத்திரலிங்கம், சிவனேஸ்வரி, கணேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிர்மலா, காலஞ்சென்ற தியாகராசா, தங்கராசா, விக்கினேஸ்வரி, சுந்தரலிங்கம், மோகனாம்பாள், காலஞ்சென்ற சதாசிவம் ஆகியாரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-00-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:00 - 8:30 மணி வரை North Toronto Crematorium (2 Stalwart Industrial Drive Gormley, Ontario) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
