திருமதி. தம்பையா சரஸ்வதி

தம்பையா சரஸ்வதி

தோற்றம்: 03 செப்டம்பர் 1945 - மறைவு: 07 ஆகஸ்ட் 2025

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரம் முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பையா சரஸ்வதி அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - பதஞ்சலி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நாகநாதி - தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீ பத்மநாதன் (இலண்டன்), ஸ்ரீ புஸ்பநாதன் (ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர், முல்லைத்தீவு), ஸ்ரீ கமலநாதன், கமலரஞ்சிதம், புஸ்பரஞ்சிதம் (இலண்டன்), ஜெகதீஸ்வரன் (காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பணிப்பாளர் - மாவட்ட செயலகம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

பவளநாயகி (இலண்டன்), சுஜாதா, சசிமலர், இரத்தினசபாபதி (ஓய்வுபெற்ற கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்), ஸ்ரீஸ்கந்தராஜா (இலண்டன்), அன்பழகி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் குமுழமுனையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் தகனம் செய்யப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/08/2025 04:00)