Mr. Thambiah Maheswaran

Thambiah Maheswaran

Date of Birth: 20 March 1943 - Deceased: 29 April 2024

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், இலகடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா மகேஸ்வரன் அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா-சிவஞானம் தம்பதியினரின் மூத்த மகனும்,

காலஞ் சென்றவர்களான பரமலிங்கம்-கனகம்மா தம்பதியினரின் மருமகனும்,

விமலாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,

சிவரஞ்சினி (ஆசிரியை - யா/வலந்தலை தெற்கு அ மி த க பாடசாலை காரைநகர்), சிவசாம்பவி (ஆசிரியை - வ/இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை வவுனியா), மாதங்கி (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் காரைநகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமணன் (சிரேஷ்ட விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம்), சுதாகர் (ஆசிரியர் - வ/மூன்றுமுறிப்பு அ த க பாடசாலை, வவுனியா), வைகுந்தவாசன் (UNDP Project - தொழில்நுட்ப உத்தியோகத்தர், தெல்லிப்பழை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிராமி, அபிராமிதன், அபிசாயகி, அபிசாதவி, அனகா, ஆரூரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

Dr. வாமதேவன் (லண்டன்), பானுமதி, கருணாநிதி (லண்டன்), சிவதாசன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-04-2024 செவ்வாய்கிழமை அன்று காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று புகழுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/04/2024 04:00)