Mrs. Thambiaiah Maheswary
Date of Birth: 12 January 1934 - Deceased: 23 December 2024
யாழ். புங்குடுதீவு 01ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பிஐயா மகேஸ்வரி அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை - இராசம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு - இளையாபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிஐயா (தம்பிப்பிள்ளை- முன்னாள் கொழும்பு வர்த்தகர், ரஞ்சனா கபே, ரஞ்சனா டிரேடர்ஸ்), இரஞ்சனாதேவி (கனடா), லோகநாயகி (பிரித்தானியா), நவீனராஜா (முன்னாள் யாழ். ஸ்ரீராம் உரிமையாளர்-கனடா), கருணாநிதி (கனடா), மகாலட்சுமி (கனடா), முருகதாஸ் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரி (மனோன்மணி-பிரித்தானியா), கனகம்மா (கோமளம்-கனடா), தவமணி (கனடா), காலஞ்சென்றவர்களான ரஞ்சனா, பாலசுப்பிரமணியம், மோகனராணி (சின்னமணி-டென்மார்க்) மற்றும் கனகலிங்கம் (சி.மு வர்த்தகர்-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சேனாதிராஜா (பொறியிலாளர்-கனடா), நடேசபிள்ளை (BSC கணக்காளர்- பிரித்தானியா), காலஞ்சென்ற நாகசோதி, அருள்மொழி, சோம சச்சிதானந்தன் (ஓய்வுநிலை கிராம அலுவலர்), சுதர்சினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் (செல்லத்தம்பி – வர்த்தகர்), கனகலிங்கம் (வர்த்தகர்), பொன்னுத்துரை (வர்த்தகர்) மற்றும் மஞ்சுளகுமாரி (கனடா), சண்முகராஜா (வர்த்தகர்- டென்மார்க்), கலாநிதி (கனடா), காலஞ்சென்றவர்களான பொன்னையா (பிருந்தாவனம் – வர்த்தகர்), தில்லையம்பலம் (சரவணாஸ் – வர்த்தகர்), கனகம்மா (தவளகிரி), சின்னத்துரை (வர்த்தகர்) மற்றும் இளையதம்பி (திருநாவுக்கரசு- வர்த்தகர், கனடா), காலஞ்சென்ற செல்லையா (வர்த்தகர்), அருளம்மா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, கமலேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் (தவளகிரி), பூரணம், பத்மலோஷனி மற்றும் நவராணி (கனடா), காலஞ்சென்ற இராசதுரை (வர்த்தகர்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
திலக்சனா- மயூரன், கவிரதி- சருஜன், வினோதினி- சஜீவன், கமல்ராஜ், நிரூபன், அனுஷன், லச்சிகா, வெல்சியா, ஷாலினி, கவாஸ்கர்- யுவானி, கபிஸ்கர்- டர்ஷிகா, லமினா, றிஷ்மியா, மிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விதுசனா, நஸ்விகா, ரியானா, மிலான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-12-2024 சனிக்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரை (St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-12-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:15 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
