திரு. தம்பையா கிருபாகரன்

தம்பையா கிருபாகரன்

தோற்றம்: 27 ஜனவரி 1974 - மறைவு: 14 ஏப்ரல் 2026

முல்லைத்தீவு - நட்டாங்கண்டல் மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா கிருபாகரன் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா - மகேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற பாலசிங்கம் - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெயரஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

தாரணி (லக்‌ஷனா- வீரகேசரி காரியாலயம், வவுனியா), யாழிந்தன், மிதுனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலாம்பிகை (சுவிஸ்), கனகாம்பிகை, விமலாம்பிகை (ஆசிரியை - வவு. கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயம்), கிருபாகிரி (ஆசிரியை - முல். மூன்றுமுறிப்பு அ.த.க பாடசாலை), தயாபரன் (ஜேர்மனி), ஜெகஜீவன் (அமெரிக்கா), காலஞ்சென்ற தேவநேசன் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

குகராஜ் (சுவிஸ்), பாலேஸ்வரன் (அதிபர்- முல். ஆறுமுகம் வித்தியாலயம்), நாகராசா, காலஞ்சென்ற ஸ்ரீதரன், மயூரி (ஜேர்மனி), ஜன்னி (அமெரிக்கா), பாலசிங்கம் (சண்முகம்), மனோரஞ்சிதமலர், ஜெயராஜசிங்கம் (இலண்டன்), யோகராசசிங்கம் (இலண்டன்), தவறஞ்சினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

விஜினா (ஆசிரியை - முல். அனிஞ்சியன்குளம் அ.த.க வித்தியாலயம்), வினோஜா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம், தெஹிவளை), கிஷாந், அஞ்சுதன் (பொறியியல் பீடம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), கிந்துசன் (சுவிஸ்), புவனிகா, ரேணுசன், அட்சயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அதிதன் (ஜேர்மனி), அகர்வன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கிருஷ்ணரூபன் (சன்விகா நகையகம், மல்லாவி), பிரசன்னா (Executive Manager - Travel Lounge Pvt. Ltd, Wellawatta) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சன்விகா, ஆதிரா, டியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் நட்டாங்கண்டல் மாங்குளம் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் திருவுடல் நட்டாங்கண்டல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2026 00:00)