திரு. தம்பையா நித்தியரத்தினம்

(முன்னாள் ஆசிரியர்- ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரி)

தம்பையா நித்தியரத்தினம்

தோற்றம்: 18 ஏப்ரல் 1935 - மறைவு: 08 ஜனவரி 2022

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா நித்தியரத்தினம் அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான ஞானரத்தினம் ஜீவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயமணி (ஓய்வுபெற்ற ஆசிரியர் வட்டு இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,

தனஞ்செயன் (பிரித்தானியா), காலஞ்சென்ற நித்தியராஜன் (கனடா), ஜெயநிதி (ஆசிரியர், சைவமங்கையர் வித்தியாலயம் கொழும்பு), ஜெயவதி (ஆசிரியர், கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லக்சுமிதேவி (பிரித்தானியா), ருத் வசந்தி (கனடா) , ஜீவரூபன் (Nexus Property Developers PVT Ltd, Colombo), சிறில் தனராஜன் (பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரிப்பிரணவி, ஹரிநிவாஜினி, ராம் நிவேதனன், லிடியா நடாஷா, றேச்சல் நடானியா, ஜீவாஸ், ஜீவினி, திவ்வியராஜ், நிரேஷ்ராஜ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான ஆனந்தரத்தினம், ஆறுமுகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயராஜா, ஜெயரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் மானிப்பாய் வீதி கோப்பாய் மத்தியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-01-2022 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் இறுதி நல்லடக்க ஆராதனை நடைபெற்று பின்னர் புனித மரியாள் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link: Click here
 
வீட்டு முகவரி:-
 
"ஞானபதி",
கோப்பாய் மத்தி,
கோப்பாய்,
யாழ்ப்பாணம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2022 17:29)