திரு. தம்பையா தவராசலிங்கம்

(யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்)

தம்பையா தவராசலிங்கம்

தோற்றம்: 24 மார்ச் 1937 - மறைவு: 14 மே 2024

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், கனடா - ரொறன்டோவில் வசிப்பவருமான திரு. தம்பையா தவராசலிங்கம் அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று  உடல் நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு தம்பையா - தையலம்மா ஆகியோரின் மூத்த புதல்வரும், 
 
காலஞ்சென்றவர்களான கந்தையா நடராஜா - நேசமணி ஆகியோரின் மருமகனும்,
 
குமுதினி அவர்களின் பிரியமான கணவரும்,

ராகுலன், மிதிலன், கேஷனா, நர்மதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிறிஸ்டினா, அகல்யா, பீட்டர், காலஞ்சென்ற பரத் ஆகியோரின் மாமனாரும்,

ஆஷ்ணா, அனாயா, மஞ்சரி, ஏரன், வருண், கேட்டன், பவன் மற்றும் ஆஷர் ஆகியோரின் விலைமதிப்பற்ற தாத்தாவும்,

காலஞ்சென்ற சரோஜினிதேவி கைலாசபிள்ளை, சகுந்தலாதேவி இராமலிங்கம், இரஞ்சனாதேவி ஆகியோரின் அன்புக்குரிய மூத்த சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா குலசேகரம், ரோகிணி குலசேகரம், மாணிக்கம் கைலாசபிள்ளை மற்றும்  ஆண்டி பெருமாள் இராமலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

கிரிஜா - குகபாலா, சரளா, அகிலா, சஞ்சயன் – சுபத்ரா ஆகியோரின் அருமை சித்தப்பாவும்,

மதியழகன் - சிந்துமதி, மதனன் - சித்ரா, மணவன் - சத்யா, சௌமியா - பாபு-பார்த்தீபன், நயோமி - சசிகுமார் மற்றும் அரவிந்த் – ஜனதீபா ஆகியோரின் அன்பு மாமாவும்,

தாயார் வழியில் 35 உடன்பிறவா சகோதரரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 18-05-2024 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை Ajax Crematorium and Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல்  பார்வைக்கு வைக்கப்பட்டு, 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை தகனக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Please accept our condolences. Our thoughts and prayers are with the family."
- Shan Shanmgavadivel (Canada, 19/05/2024 06:32)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/05/2024 10:20)