Mr. Thambiayya Kumarasamy

(Retired Principal)

Thambiayya Kumarasamy

Date of Birth: 07 May 1936 - Deceased: 10 April 2024

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கச்சாய் வீதி கொடிகாமம் மற்றும் மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிஐயா குமாரசாமி அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,

கதிரேசு - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

அன்னப்பிள்ளை (அன்னலட்சுமி - ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான ஞானபூபதி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற சிதம்பரநாதனின் மைத்துனரும்,

சுதர்சன் (பிரித்தானியா), சுதர்சினி (பிரான்ஸ்), சுகுந்தன் (பிரித்தானியா), சுபாஜினி (ஆசிரியை - யா/கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயவதனி (பிரித்தானியா), பேரின்பநாயகம் (பிரான்ஸ்), கமலினி (பிரித்தானியா), இரமேஸ் (ஆசிரியர்- யா/மிருசுவில் R.C.T.M.S) ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,

ஹனுராம், பிராமி, ஆரணி, ஆசிகன், யதுர்ஷன், சபிஷன், கனுஷன், திலக்‌ஷன், திஷானன், திதுஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மீசாலை கிழக்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று புகழ் உடல் தகனக்கிரியைகளுக்காக சாவகச்சேரி கண்ணாடிபிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2024 04:00)