திரு. தம்பிஐயா வேலாயுதம்

(Bala Grinding Mill, Sea Street, Negombo)

தம்பிஐயா வேலாயுதம்

மறைவு: 29 மே 2026

யாழ். மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கடற்கரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பிஐயா வேலாயுதம் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா- செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இரத்தினம் அம்மையார் அவர்களின் அன்பு கணவரும்,

பாலசந்திரன் (ஜேர்மனி), பாலரதனி (நீர்கொழும்பு),ஜெயசந்திரன் (ஜேர்மனி), ரவிசந்திரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகனேஸ்வரி, அருந்தவநாதன் (Sutha Jewellers, Negombo), விஜயகுமாரி, சுஹாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சபாரடணம், தியாகராஜா மற்றும் பத்மநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயனேஷ், லக்‌ஷிகா, வினுஷா, அரவிந்தன், சஹானா, ரக்‌ஷன், ஹரிணி, அருஷா, அபினேஷ், அயா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 02:00 மணியளவில் இல- 81, கடற்கரை வீதி, நீர்கொழும்பு இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 03:00 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2026 00:00)