Mr. Thambinathar Sellathurai
Date of Birth: 05 May 1937 - Deceased: 18 May 2024
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, Montreal-கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிநாதர் செல்லத்துரை அவர்கள் 18-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வேலாயுதபிள்ளை (கச்சாய் கொடிகாமம்), காலஞ்சென்றவர்களான நல்லம்மா விஸ்வநாதன், புலேந்திரன் (டென்மார்க்) மற்றும் புவனேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மதிவதினி (Montreal), ரஞ்சனி (Ottawa), ரவீந்திரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரட்ணகுமார் (Montreal), ராகவன் (Ottawa), ரேணுகா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பார்வைக்காக Rideau Funeral Home & Cemetery (4275 boul. des Sources Dollard-des-Ormeaux, QC H9B 2A6, Canada) என்ற முகவரியில் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை வைக்கப்பட்டு, 27-05-2024 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
