Mr. Thambipillai Ponnampalam
(ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி)
Date of Birth: 20 January 1934 - Deceased: 24 December 2024
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படி, Scarbrough - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 24-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை (காலி-பிரபல வர்த்தகர்) - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் (பிரபல வர்த்தகர்- மாத்தறை) - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,
இரவிச்சந்திரன் (ஆத்மன்), விஜித்தா, காலஞ்சென்ற உதயச்சந்திரன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கருணைமதி, சிறீரங்கன், சிவரூபன் ஆகியோரின் மாமனாரும்,
கஸ்தூரி, கார்த்திகன், அஞ்சனா, துர்காசினி, சிந்தியா, மகிந்த், அசித்தா மற்றும் நிலான், வஸிஸ்டன் ஆகியோரின் பேரனும்,
மாயா லக்சுமி, டேஸா கயில் ஆகியோரின் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் (பிரபல வர்த்தகர்-VTR), நாகபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மங்கையர்கரசி, இராஜேஸ்வரி, சண்முகநாதன் மற்றும் சர்வேஸ்வரி, சற்குணநாதன், காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-12-2024 திங்கட்கிழமை மாலை 4:00 - 9:00 மணி வரையும், 31-12-2024 செவ்வாய்க்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
