திரு தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்

தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்

தோற்றம்: 25 நவம்பர் 1939 - மறைவு: 27 பெப்ரவரி 2024

யாழ். மாதகல் வடக்கு கொடடைக்காடு காளி வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் (Viborg விபோக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் இன்று 27-02-2024ம் திகதி செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மீனாட்சிப்பிள்ளை - சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற தங்கம்மா - இராசையா அவர்களின் அன்பு மருமகனும்,
 
செல்லம்மா (நேசம்) அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்ற கந்தசாமி, பரமசாமி, இராசையா, சிற்றம்பலம், மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், 
 
விக்கினேஸ்வரன்(விக்கி), லலிதா, சுரேஸ், சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
புஸ்பராணி (ராணி), சிவகுமார், ரேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ரண்டிகா, காலஞ்சென்ற ஜனிஸ்சன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
 
ஜெகனி, ஐங்கரன், சாயினி, சுபாஜினி, துளசினி ஆகியோரின்  அன்பு அப்பப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிநத்தரப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2024 12:43)