Mr. Thambipillai Tharmaratnam
Date of Birth: 09 September 1967 - Deceased: 02 November 2024
யாழ் பாலாவோடை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை தர்மரட்ணம் அவர்கள் 02-11-2024 கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற V.R.தம்பிப்பிள்ளை (VRT-கிளிநொச்சி பிரபல வர்த்தகர்)-புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-மதங்கசூடாமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வனஜா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நவரத்தினம், திருநாவுக்கரசு, இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, விக்கினேஸ்வரி, காலஞ் சென்ற மோகனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற முத்துலட்சுமி, புவனேஸ்வரி, சிவக்குமாரன், ஈழவர்மன், காலஞ்சென்றவர்களான வனிதா, வசந்தா மற்றும் வசந்தகுமார், விஜயகுமார், வனஜகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-11-2024 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 8:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து 9:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
