திரு. தம்பிப்பிள்ளை கைலாசநாதன்
(வர்த்தகர்)
மறைவு: 11 அக்டோபர் 2025
யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும், தற்போது கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை கைலாசநாதன் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பிப்பிள்ளை (தபால் நிலைய பணியாளர்) - இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
ரமணி (சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி (Architect), நிரோஷ் (Engineer), கஜன் (Sales Consultant), சுவேதா (IT Specialist) ஆகியோரின் அன்புத் ததந்தையம்,
காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, பகவதி (ஓய்வு நிலை ஆசிரியர்), சிவபாக்கியம் (ஓய்வு நிலை அதிபர்), திருநாவுக்கரசு (சுவிஸ்), கணபதிப்பிள்ளை (வர்த்தகர்) மற்றும் சிதம்பர நாதன் (ஓய்வு நிலை விலைக் கட்டுப் பாட்டு அதிகாரி), காலஞ்சென்றவர்களான சித்திரவேல் (ஓய்வு நிலை பிராந்தியப் பொறுப்பாளர் - RED CROSS), முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கண்ணதாசன் (Certified Mechanical Technician & Supervisor - சுவிஸ்), சுகிர்த்தனா (Certified Nurse - சுவிஸ்), அச்சுதன் (Certified Mechanical Technician & Supervisor - சுவிஸ்), தீனா (Dentist - சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமானாரும்,
அஷ்வின், இஷானா, கவிஷா, அனிஷ், கார்த்திகேயன், ஷகானா, தியாரா, டேவி, ஷனைறா, மைலா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 3ம் கட்டை, நூல் நிலைய வீதி, கல்வியங்காடு, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 15-10-2025 புதன்கிகிழமை அன்று இறுதிக் கிரிகைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
