தகரு. தம்பிப்பிள்ளை நடராசா
(கணக்காய்வாளர்)
மறைவு: 09 அக்டோபர் 2025
மலேசியாவை பிறப்பிடமாகவும் காரைநகர் மொந்திபுலம் சிவன்கோயில் வீதி, கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை நடராசா அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - மீனாட்சி தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சேதுப்பிள்ளையின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பூரணம் தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற நேசம்மா அவர்களின் கணவரும்,
காலஞ்சென்ற தனபாக்கியவதியின் சகோதரனும்
சச்சிதானந்தன், சிவானந்தன், நந்தினி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
காந்தினியின் மாமனாரும்,
ஷாலினி, வஜினி ஆகியோரின் தாத்தாவும்
காலஞ்சென்றவர்களான சங்கரப் பிள்ளை, செல்லம்மா, நாகம்மா, நடராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-10-2025 சனிக்கிழமை அன்று காலை 9:00 - 5:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
